சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
Lollu Sabha Udhaya: `அப்பாவுக்கு சர்ஜரி பண்ணி இடது கால் எடுத்துட்டோம்!' - உதயாவின் மகள்
சந்தானத்தின் பல காமெடி வசனங்களை எழுதியவர் நடிகர் சிரிக்கோ உதயா.
இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர். நடிப்பை தாண்டி இவர் இசையின் பக்கமும் கவனம் செலுத்தியிருக்கிறார்.
சினிமாவை தாண்டி 35 வருடங்களாக இசை துறையில் வயலின் வாசித்திருக்கிறார் சிரிக்கோ உதயா. இவர் 15 வருடங்கள் சந்தானத்துடன் இருந்து அவருடன் காமெடி ஸ்கிர்ப்ட்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நேற்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சிரிக்கோ உதயாவின் மூத்த மகள், ``அப்பாவுக்கு இரண்டு மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை. சர்க்கரை நோய் கொஞ்சம் அதிகமானதுனால கடந்த 6 மாதங்களாகவே டல்லாகவேதான் இருந்தாங்க. அவருக்கு எதிர்ப்புக் சக்தியும் குறைவுதான். கால்ல இரத்தவோட்டம் சரியில்லாததுனாலையும், சர்க்கரை நோயினாலும் அவருக்கு சர்ஜரி பண்ணி கால் எடுக்க வேண்டிய சூழல் வந்துச்சு. பலரும் வலது கால்னு போட்டுட்டு இருக்காங்க. சர்ஜரி பண்ணி இடது கால் முட்டிக்கு கீழ எடுத்திருக்காங்க. சர்ஜரி பண்ணி அப்பா இப்போ நல்லா இருக்காரு. ஓமந்தூரார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருக்கிற அப்பாவுக்காக எல்லோரும் வேண்டிக்கணும்னு கேட்டுக்கிறேன். நாங்க பசங்க மூணு பேர் இருக்கிறோம். அப்பாவை நாங்கதான் பார்த்துட்டு இருக்கோம். சினிமாதுறையில இருக்கிற யாருக்குமே நாங்க அப்பாவோட நிலைமையைப் பற்றி எதுவும் சொல்லல. அப்பாவோட பழக்கத்துனால உதவி பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க. நான் இந்த விஷயத்தைப் பற்றி வெளில யார்கிட்டையும் சொல்லாமல் ஃபேமிலிக்குள்ளையே முடிச்சுகிட்டோம்." என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play