Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
தினமும் ரூ.750 சம்பளத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக பணியமர்த்திட தகுதியானவர்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை(ஜன.10) மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.34,000
பணி: மருந்து வழங்குநர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.750
பணி: பல்நோக்கு பணியாளர்கள்
காலியிடங்கள்: 12
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.300
பணி: தரவு உதவியாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: சித்த மருத்துவ ஆலோசகர்
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: சிகிச்சை உதவியாளர் - பெண்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: மருந்து வழங்குநர் நடமாடும் பழங்குடியினர் சித்த மருந்தகம்
காலியிடங்கள்: 1
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.750
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எட்டாம் வகுப்பு டி.பார்ம், பிஎஸ்எம்எஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: wwww.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட கல்வித்தகுதிச் சான்று, முன்னுரிமை சான்று உள்ளிட்ட உரிய சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலசங்கம், மாவட்ட சித்த மருத்தவர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேறுமாறு அனுப்ப வேண்டும்.
தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் நாள் குறித்த தகவல் பதிவஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.