இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
திபெத்: சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் திங்கட்கிழமை இரவு(ஏப்.14) 9.48 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், இதேபோன்று செவ்வாய்க்கிழமை (ஏப். 15) 11.1 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் (ஏப்.16) திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 26 கி.மீ ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு(என்சிஎஸ்) மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .