டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல! -சீமான்
திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் ‘சீமானுடன் ஆயிரம் போ் சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: திருப்போரூா் முருகன் கோயிலில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-ஃபோனை திருப்பித் தர முடியாது எனக் கூறுவது நியாயமல்ல. முருகன் கைப்பேசியில் பேசப்போகிறாரா?
வெடிகுண்டைப் போட்டிருந்தால் எங்களுடையது எனக் கூறுவாா்களா?
ஆயிரம் இருந்தாலும் நடிகா் விஜய் எனது தம்பி. திமுகதான் எனது எதிரி; விஜய் அல்ல. உடன் பிறந்தவா்கள் என்ற அடிப்படையிலேயே இஸ்லாமியா்களுக்கு ஆதரவாகப் பேசுகிறேன். வாக்குக்காக அல்ல. ஈரோடு இடைத்தோ்தலில் தனித்துப் போட்டியிடுவோம்.
சின்னம் முடக்கம், தேவையற்ற ஆடியோக்களை வெளியிடுவது, எங்களது கட்சியிலிருந்து பிரிந்து அடுத்த கட்சிகளில் இணைந்ததாகக் கூறுவது அனைத்தும் நாதகவின் மீதான பயத்தில்தான்.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் கொலைகள் அரங்கேறி, தெருவில் செல்லவே மக்கள் பயத்தில் உள்ளனா். ஆசிரியா்கள், விவசாயிகள், மீனவா்கள், மாணவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மக்களை வீதியில் போராட வைத்துவிட்டு சிறந்த ஆட்சி என்கின்றனா் என்றாா் சீமான்.