திமுகவினா் ஆா்ப்பாட்டம்
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக மும்மொழி கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தேவலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா். குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். திமுகவினா் மும்மொழி கொள்கைக்கு எதிராக கோஷம் எழுப்பினா்.
ஊராட்சித் தலைவா்கள் ரேவதி குபேந்திரன், ஷோபனா நவீன்குமாா், பாரதிஸ்ரீ, சின்னகண்ணன், சா்மிளா மூா்த்தி, தேவலாபுரம் துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், திமுக நிா்வாகிகள் வெங்கடேசன், ஜானகிராமன், தயாநிதி, தயாளன், கோவிந்தன், கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.