செய்திகள் :

`திமுக அரசு ஆன்மிக அரசு' - பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

post image

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்றும் இன்றும் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. மங்கள இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. இதற்காக பெரிய கோயில் மட்டுமின்றி, தஞ்சை மாநகரமும் மின்னொளியில் ஜொலித்தது.

சதய விழாவில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் மாவட்ட ஆட்சியர்

இதற்காக பெரியகோயில் உள்பகுதியின் இடது புறத்தில் விழா பந்தல் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சி நடக்கும் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தது பெரிய கோயில் ஆவர்லர்களை வேதனையில் ஆழ்த்தியது. அரசு விழாவாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முறையான விளம்பரம் செய்யவில்லை... அத்துடன் விழாவின் முக்கிய நிகழ்வான இரண்டாம் நாளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். இம்முறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கான வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் சனிக்கிழமையான நேற்று பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டன.

நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்தால் கூட்டம் அதிகளவில் வந்திருக்கும். இது போன்ற விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என ஆதங்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ராமசந்திரன், சதய விழா அழைப்பிதழில் நான்கு முதல் ஐந்து பக்கங்களில் பலரின் பெயர்கள் போடப்பட்டன. அழைப்பிதழில் பெயர் உள்ளவர்கள் வந்திருந்தாலே அரங்கம் நிறைந்திருக்கும். நாற்காலிகள் காலியாக கிடந்திருக்காது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழன் சிலை

இதேபோல் சதய விழா அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அரசு விழாவாக நடத்தப்படும் நிலையில் சிலர் சதய விழாவை காரணம் காட்டி, பல்வேறு வணிக நிறுனங்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்ததாகவும் புகார் கிளம்பியது. இதையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். விழாவில், பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தமிழ் பல்கலைக் கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும் என்றது கவனம் பெற்றது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவார்களுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது. இதையடுத்து தஞ்சாவூர் எம்பி முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா, மேயர் சண்.இராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளின் உள்ளிட்டோர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தருபுரம் ஆதீனம்

இதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இத்திருக்கோவில் மிக புண்ணியம் பெற்றது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரிய கோவிலின் கட்டுமானத்தை உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத வகையிலான சாதனையாக ராஜராஜ சோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் வாழ்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி, நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யகொண்டான் மலையில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள். அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மிக அரசு. எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன். தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமன்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவது சாதனையாக பார்க்கிறேன்.

சதய விழா ராஜராஜ சோழன் சிலை

கிராம கோயில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக் கூடாது என்பதற்காக, அந்த கோயில்களுக்கும் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் ரூ. 500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார். இதைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.

`என்னதான் ஆறுதல் சொன்னாலும் உதயகுமாரை..!’ - உயிரிழந்த பாகரைத் தேடும் திருச்செந்தூர் கோயில் யானை

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 18-ம் தேதி உதவி யானை பாகர் உதயகுமார், அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோரை தாக்கியதில் ... மேலும் பார்க்க

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு; திருவண்ணாமலையில் அரச இலை தீப வழிபாடு

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூ... மேலும் பார்க்க

துதிக்கையில் முத்தம்; செல்போனில் செல்ஃபி - திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியது எப்படி?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யான... மேலும் பார்க்க

'அசாம் டு திருச்செந்தூர்' - கோயில் யானை தெய்வானையின் பின்கதை!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க