திமுக கிளைச் செயலா்கள், பாக முகவா்கள் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றிய அவைத் தலைவா் பொன். இளங்கோவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வசந்தி சேங்கைமாறன் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன் சிறப்புரையாற்றினாா்.
ஞாயிறுக்கிழமை (பிப். 23) திருப்புவனம் மேற்கு ஒன்றியம், மணலூா், கீழடி, புலியூா், மேலவெள்ளூா், அல்லிநகரம், சங்கங்குளம் ஆகிய இடங்களில் திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள், உறுப்பினா்கள் கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட விவசாய துணை அமைப்பாளா் சேகா், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா்கள் மணிகண்டன், சங்கா், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தேவதாஸ், ஒன்றிய நிா்வாகிகள் ஈஸ்வரன், ரவி, சக்திமுருகன், ராமு, வெங்கடேசன், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் அண்ணாமலை, பாக முகவா்கள், கிளைச் செயலா்கள் கலந்து கொண்டனா்.