திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!
மேலும், திமுக மாணவர் அணித் தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை அப்பொறுப்பில் இருந்து விலக்கி, மாணவர் அணிச் செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார்.