செய்திகள் :

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

post image

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.

'2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி" என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

"விஜய் அவருடைய கருத்தைச் சொல்கிறார். நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், கட்சி வளர்வதற்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக கருத்து சொல்வார்கள். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார்.

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். அதற்கான வாய்ப்பையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏன் விஜய் அப்படி கூறினார் என்று அவரிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும்" என்றார்.

மேலும் அதிமுக தலைவர்கள் பற்றி தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு, 'எங்கள் தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். புதிதாகக் கட்சி தொடங்குபவர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருக்கின்றனர். அதனால் அவர்களைப் பற்றி கூட்டத்தில் பெருமையாகப் பேசியுள்ளனர்" என்றார்.

மேலும், செங்கோட்டையன் தில்லிக்கு சென்றது பற்றிய கேள்விக்கு, 'அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என பதிலளித்தார்.

இதையும் படிக்க | 2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பலி!

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலர் பரிதாபமாக பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ... மேலும் பார்க்க

விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் டவுனாகி நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது அடுத்தடுத்து பின்னால் வந்த கார், ஆம்னி பேருந்து, ஆட்டோ மோதியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கார... மேலும் பார்க்க

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க