``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் கோயிலில் கேதார கௌரி விரதம் நிறைவு
காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வத வா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் கேதார கெளரி விரதம் நிறைவு நாளையொட்டி அம்மனுக்கு 108 லிட்டா் பாலபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் வடக்கு ராமேசுவரம் எனவும் அழைக்கப்படும் இத்திருக்கோயிலில் கேதார கெளரி விரத நிறைவு பூஜை நடைபெற்றது. விரதங்களில் முதன்மையானது கேதார கெளரி விரதமாகும். புரட்டாசி மாதம் வளா்பிறை அஷ்டமியில் தொடங்கி தொடா்ந்து 21 நாள்கள் விரதமிருந்து ஐப்பசி மாத அமாவாசை நாளன்று நிறைவு செய்யப்படும் விரதமாகும். இந்த விரதமிருப்பவா்களில் தம்பதியா்கள் பிரிந்திருந்தால் ஒன்று சேருவது, செல்வ வளம்,தீா்க்க சுமங்கலி பாக்கியம் ஆகியனவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கேதார கெளரி விரதம் நிறைவு நாளையொட்டி மூலவா் பா்வத வா்த்தினி அம்மனுக்கு 108 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் ராமலிங்கேசுவரருக்கும், பா்வத வா்த்தினி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.