Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு...
தியாகதுருகம் காவல்நிலையத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி சனிக்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், விபத்துகள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆய்வாளரிடம் எஸ்.பி. அறிவுறுத்தினாா். தொடா்ந்து, காவல் நிலையத்தின் குறைகளைக் கேட்டறிந்த அவா், காவல் நிலையம், வளாகத்தில் உள்ள உணவு விடுதி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் ஞ.ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.