செய்திகள் :

'திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்' - அஜித் விவகாரத்தில் அண்ணாமலை

post image

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மிகவும் அரிதாகத்தான் தேர்தல் புறக்கணிப்பு செய்யும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி நடைபெற்றது என்று பார்த்தோம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக  கூட்டணி சார்பில் புறக்கணித்துள்ளோம்.

அண்ணாமலை

தேசிய தலைவர் நட்டா ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார். வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை அதிகளவில் உள்ளது. பாஜக போட்டியிட்டால் மீண்டும் வாக்காளர்கள் பட்டியில் அடைத்து வைக்க நேரிடும்.

ஆட்சி, அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இடைத்தேர்தலை மக்கள் மத்தியில் இருந்து அதிகாரிகள் தேர்தல் நடத்துவது இல்லை. யாரையும் வாக்களிக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை. மக்கள் முடிவு செய்வார்கள். ஆளுநர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

சென்னை முழுவதும் ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். முதலமைச்சர் ஏன் கண்டிக்கவில்லை. இதை முதலமைச்சர் ஊக்குவிக்கிறார்.  ஆளுநர் கருத்து சரியானதே. அதில் தவறு இல்லை. திமுக தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெரியார் விவகாரத்தில் சீமான் கருத்து சரியானது. நான் ஒரு அப்பா அம்மாவுக்கு தான் பிறந்தேன். இதுவரை ஊழல் செய்யவில்லை. அண்ணன் துரைமுருகன் 1962 முரசொலி பத்திரிகையை ஒருமுறை பார்க்க வேண்டும். துரைமுருகன் ரிட்டயர்மென்ட் வயதுக்கு வந்துவிட்டார். அஜித் எந்த காட்பாதர் இல்லாமல் சினிமாவில் முன்னுக்கு வந்தவர்.

உதயநிதி ஸ்டாலின், அஜித்குமார்

உதயநிதி போல ஸ்டாலின், சந்தானம் உதவியில் அவர் வரவில்லை. அஜித்தின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு காரணம் என்றால், இங்கு மைக் உள்ளது அதனால் காரி துப்ப முடியாது. வெளியே சென்ற  பிறகு காரி துப்புவேன். அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயநிதி.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"- அன்புமணி எச்சரிக்கை

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்... மேலும் பார்க்க

USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?

‘முழுக்க முழுக்க மோசடி'ஹெச்1பி அமெரிக்க விசா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பாக அண்மையில் வெடித்த விவாதம், டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களுக்குள்ளேயே குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் பிளவை ஏ... மேலும் பார்க்க

ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | Imperfect show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - "இதுவரை, ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி!" - ஸ்டாலின்* - பொள்ளாச்சி சம்பவம் குறித்து யார் உண்மையைச் சொன்னார்கள்? - சட்டமன்றத்தில் மோதல்!* - பாலியல் குற்றவாளிகளுக்கு மரண ... மேலும் பார்க்க

`1978-ல் சரத் பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது!' - அமித் ஷா பேச்சு

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்... மேலும் பார்க்க