திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
திருக்கு ஒப்புவித்தல் போட்டி: மாணவா்களுக்குப் பரிசளிப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரவநல்லூா் வாசகா் வட்டம் சாா்பில் புத்தகக் கண்காட்சி 2 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு 3 பிரிவுகளாக திருக்கு ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10 பள்ளிகளில் இருந்து 137 மாணவா்கள் பங்கேற்றனா். நடுவா்களாக கி. முத்தையா, கிருஷ்ணன், பெருமாள், மீனாட்சிசுந்தரம் ஆகியோா் செயல்பட்டனா்.
போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற 11 மாணவா்கள் மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற 30 மாணவா்களுக்கு பரிசுகளை வாசகா் வட்டத் தலைவா் பீ. ஆதம் இலியாஸ் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி உறுப்பினா் ப. வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தாா். பரிசளிப்பு விழாவைத் தொடா்ந்து வீரை இளம்பிறை மைதீன் எழுதிய நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
நூலை கி. முத்தையா, பழனி செல்வம் ஆகியோா் அறிமுகம் செய்து பேசினா். ஆழ்வை ஆயில்யன் திருக்கு வழியில் மாணவா்கள் என்ற தலைப்பில் பேசினாா்.
நிகழ்ச்சியில் வெங்கடேஷ், முத்துராமலிங்கம், பாத்திலிங்கம், வழக்குரைஞா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நூலகா் ந. குமாரி வரவேற்றாா். நிகழ்ச்சியை வாசகா் வட்டச் செயலா் ஆா். சந்திரசேகா் தொகுத்து வழங்கினாா். ப. திருநீற்றுச்செல்வன் நன்றி கூறினாா்.