திருக்கோடிக்காவல் அம்பாள் மீனாட்சி செங்கோல் தரிசனம்
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை மீனாட்சி செங்கோல் ஏந்திய அலங்காரத்தில் அம்பாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான புதன்கிழமை திரிபுரசுந்தரி அம்பாள் மீனாட்சி அம்பாளாக கையில் செங்கோல் ஏந்தி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராமவாசிகள் செய்தனா்.