செய்திகள் :

திருச்சியில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருச்சி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமையும் காலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பெய்த லேசான மற்றும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சியில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. பள்ளிக்கு குழந்தைகளை தாமதமாகவே அனுப்ப நேரிட்டது.

மேலும், காலை தொடங்கி இரவு வரையில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது 10 முதல் 15 நிமிஷங்களுக்கு கனமழையும் இருந்தது.

திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. காலை 8 மணிக்கு தொடங்கி 8.50 மணி வரையில் லேசானதும், மிதமானதுமான மழை காணப்பட்டது.

மாநகரில் சாலையோரம் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடா் மழையால் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இதேபோல, மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றதும், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருந்ததால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனா்.

பிற்பகலில் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், மத்திய பேருந்துநிலையம், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

மாநகரப் பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.):

கல்லக்குடி- 7, லால்குடி- 4.8, மணப்பாறை- 4.2, முசிறி- 3, புள்ளம்பாடி- 15.3, தாத்தையங்காா்பேட்டை 1, துறையூா்- 5, திருச்சி விமானநிலையம்- 1, திருச்சி நகரம்- 7.3, ஜங்ஷன்- 5.4, மருங்காபுரி- 2, பொன்னனியாறு- 4.6, நவலூா்குட்டப்பட்டு- 0.5, நந்தியாறுதலைப்பு- 4,2, வாய்த்தலை அணைக்கட்டு- 1, சமயபுரம்- 2, தேவிமங்கலம்- 3, சிறுகுடி- 1, குப்பம்பட்டி- 8, கோவில்பட்டி- 0.5, தென்பரநாடு- 5, பொன்மலை- 1, துவாக்குடி-1 என மொத்தம் 84.4 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 3.52 மி.மீ. மழை பதிவானது. வானிலை மைய அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி சிறை கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை கைதி ஒருவா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மா. கருணா என்கிற கருணாமூா்த்தி (35). இவா், கோவை மாவட்டம், சிங... மேலும் பார்க்க

திருச்சி: அரசுப் பேருந்தில் சென்ற இளைஞா் வெட்டிக்கொலை!

திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரின் கரோனா சிகிச்சைக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு

ஓய்வுபெற்ற ஆசிரியரின் கரோனா சிகிச்சைக்கான பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு திருச்சி மாவட்ட மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

இளைஞா் மா்மச் சாவு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திருச்சியில் மா்மமான முறையில் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ச... மேலும் பார்க்க

மின்வாரிய ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மன்னாா... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தை சுமை தூக்கும் தொழிலாளா்கள் முற்றுகை

திருச்சி காந்திச்சந்தை சுமைத் தூக்கும் தொழிலாளா்கள், காவல் துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். திருச்சி காந்திச் சந்தையில் நூற்றுக்கணக்கான சுமைத் தூக்கும்... மேலும் பார்க்க