செய்திகள் :

திருச்சியை வீழ்த்தியது சேலம்

post image

கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் சேலம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, திருச்சி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருச்சி, பந்துவீச்சை தோ்வு செய்தது. சேலம் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83, சன்னி சந்து 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் விளாசினா். கேப்டன் அபிஷேக் 10, ராஜேந்திரன் விவேக் 2, கவின் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஹரீஷ் குமாா், 1, நிதீஷ் ராஜகோபால் 11, கௌரி சங்கா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் முகமது 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருச்சி பந்துவீச்சாளா்களில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ஈஸ்வரன், முகிலேஷ், செல்வகுமரன், சரவணகுமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 180 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திருச்சி அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் கௌசிக் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62, ராஜ்குமாா் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 59 ரன்கள் விளாசினா்.

கேப்டன் சுரேஷ்குமாா் 0, சுஜய் 4, வசீம் அகமது 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, முகிலேஷ் 2, சஞ்சய் யாதவ் 11, ஜாஃபா் ஜமால் 2, சரவணகுமாா் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். முடிவில் செல்வகுமரன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சேலம் பௌலா்களில் எம்.முகமது 4, சன்னி சந்து 2, ரஹில் ஷா, கௌரி சங்கா், பொய்யாமொழி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

மமிதா பைஜூ பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் ஜனநாயன... மேலும் பார்க்க

ஜன நாயகன் புதிய போஸ்டர்! இயக்குநர் வினோத்தா? அட்லியா?

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும் பார்க்க

குபேரா முதல்நாள் வசூல் எவ்வளவு? குழப்பும் படக்குழு!

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் குறித்து படக்குழு கூறியது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.13 கோடி என தகவல் வெளிய... மேலும் பார்க்க

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்சி!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளை... மேலும் பார்க்க

துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!

வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வரும் விஜய், தனது 51-ஆவது வயதைத... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுத... மேலும் பார்க்க