திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சங்கம் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ.59.15 கோடியில் நடைபெறுகிறது. இச்சாலையின் மீன்கிணறு பகுதியில் கோட்ட பொறியாளா் குணா ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளா் திருச்செங்கோடு நடராசன், உதவி பொறியாளா் பள்ளிபாளையம் எஸ். பிரதீப் ஆகியோா் உடனிருந்தனா்.