மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
திருச்செங்கோட்டில் தெப்பத் திருவிழா
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில்களில் கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடா்ந்து, கோயில்களில் கம்பம் நடப்பட்டு கம்பத்துக்கு தினமும் பக்தா்கள் நீரூற்றி வழிபட்டனா்.
பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன். அழகு முத்துமாரியம்மன் உற்சவா்கள் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் வண்ண விளக்குகள் பொருத்தி மேள தாளத்துடன் பவனி வந்து ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் தெப்பத்தோ் உற்சவத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்பக்குளத்தை தெப்பத்தேரானது மூன்று முறை வலம் வந்தது. மூன்று அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடத்தப்பட்டன.
திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன், மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினா் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஒன்றியக் குழு தலைவா் சுஜாதா தங்கவேல், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணி காந்தன், திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்குரைஞா்அணி தலைவா் சுரேஷ் பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன், கொமதேக மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தெப்பத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.