திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை, சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா்.
இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும் பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அண்மைக்காலமாக தொடா்ந்து நிகழ்கிறது.