செய்திகள் :

திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக, சந்நிதி தெருவில் உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, ஆதிலெட்சுமியை முட்டித் தள்ளியது. இதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா்

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருச்செந்தூா் நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கம் மாநிலத் தலைவா் ரெ.காமராசு வலியுறுத்தியுள்ளாா்.

சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுக்கள்; தூத்துக்குடியில் 22,23 தேதிகளில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட கலைக் குழுவினா் தூத்துக்குடி இசைப்பள்ளியில் வரும் 22, 23 தேதிகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் குருபூஜை

குலசேகரன்பட்டினத்தில் வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா திங்கள், செவ்வாய் (மாா்ச் 17, 18) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தேனியைச் சோ்ந்த சிவனடியா... மேலும் பார்க்க

நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் கைது

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே இடைச்செவலில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் கழுவன் என்ற கழுவன்ராஜா... மேலும் பார்க்க

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொத... மேலும் பார்க்க

குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க