செய்திகள் :

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர சீரமைப்பு: `அதிசய மூலிகை ஓவியங்கள்’ - பக்தர்கள் வைக்கும் கோரிக்கை

post image

மகா கும்பாபிஷேகம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது  திருச்செந்தூர், அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணகான  பக்தர்களும் விடுமுறை மற்றும் விசேச காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும்  வருகை தருவார்கள். இக்கோயிலில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக  இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மூலிகை ஓவியங்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் புதுப்பிப்பு, கோவில் பிரகாரங்கள், வெளிப்புற தரைத்தளங்கள், விடுதிகள் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. ஒன்பது அடுக்குகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் கோபுரத்தின் 6வது மற்றும் 7வது அடுக்குகளில் ராஜகோபுரங்களில் மட்டுமே காணப்படும் மிகவும் பழமையான ’மூலிகை ஓவியங்கள்’ காணப்படுகிறது.

’மூலிகை ஓவியங்கள்’

இந்த ஓவியங்கள் முற்காலங்களில் மூலிகைகளால் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.  நந்திமேல் சிவபெருமான் அமர்ந்திருப்பது போலவும், அங்கு இருப்பவர்கள்  சிவபெருமானை வணங்குவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழ் வரிசையில் முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஓவியங்களில் புறாக்கள் பறப்பது போன்ற  ஓவியமும், தட்சிணாமூர்த்தி, சந்திரசேகரபெருமாள் பிரியாவிடை அம்மன், சிவபெருமான் அதிகார நந்தி, சண்டிகேஸ்வரர், முனிவர்கள் போன்ற ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தும் இந்த சுவரில் பூசப்பட்டுள்ள வர்ணத்தால் மறைந்து காணப்படுகிறது. 

ராஜகோபுரம்

கடந்த காலங்களில் இந்த ராஜகோபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது இந்த மூலிகை ஓவியங்களின் மதிப்பும் அருமையும் தெரியாமல் அதன் மீது வர்ணம் பூசப்பட்டுள்ளது.  இதனால் அந்த ஓவியங்கள் அனைத்தும் அழிந்தபடி தெரிகிறது. எனவே இந்த மதிப்பு மிக்க ஓவியங்கள் சேதமடையாமல் அதன் மேல் பூசப்பட்ட வர்ணங்களை அகற்றி இந்த மூலிகை ஓவியங்களை பாதுகாக்க திருக்கோயில் நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா!

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா; கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜனவரி 31) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மீனாட்சியம்மன்திருவிழாக்களின் நகரமான மதுரை ... மேலும் பார்க்க

மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை - 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்!

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ள... மேலும் பார்க்க

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் தோரணமலையில் தைப்பூச சங்கல்ப விழா - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை சங்கல்ப விழா: 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீ... மேலும் பார்க்க

கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் | kumbh mela Album

மகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா க... மேலும் பார்க்க