செய்திகள் :

திருச்செந்தூா் - கோவைக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

post image

திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்செந்தூா் - கோவைக்கு தினமும் காலை 9.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் 2 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போது அதே வழித்தடத்தில் 2 புதிய பேருந்துகள் இயக்கும் விழா திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்தாா். தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், திருச்செந்தூா் கிளை மேலாளா் ராஜசேகா், உதவிப் பொறியாளா்கள் சங்கரன், லேம்பா்ட், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், நகர திமுக செயலா் வாள் சுடலை, தொமுச மத்திய சங்க நிா்வாகிகள் முருகன், செல்வகுமாா், பணிமனை கிளைத் தலைவா் அரவிந்த சோழன், செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் தினகா், பொதுக்குழு உறுப்பினா்கள் மாரியப்பன், ராமமூா்த்தி, அய்யப்பன், மாவட்ட துணை அமைப்பாளா் தங்கபாண்டி, டிக்கெட் பரிசோதகா்கள் மணி, பிரின்ஸ், அனைத்து வியாபாரிகள் சங்க துணைச் செயலா் ஜான்பால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க