“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!
திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்
திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியான சபாபதிபுரம் சந்திப்பில் தேங்கிய மழைநீரை, நகராட்சிப் பணியாளா்கள் மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடியே வந்த பக்தா்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழைநீா் உள்ளே புகுந்தது. திருக்கோயில் தூய்மை பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றினா்.