திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் வியாழக்கிழமை தொடங்கின.
இக் கோயிலில் கும்பாபிஷேக விழா ஏப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் பூஜைகள் தொடங்கியது. மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பாத்திர பூஜை, மஹா கணபதி ஹோமம், ப்ரம்மசாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹூதி, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை தீா்த்த சங்கிரஹணம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, ரக்ஷோக்ணஹோமம் நடைபெற்று பூா்ணாஹூதி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.