திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
திருட்டு வழக்கில் 2 போ் கைது: 87 பவுன் தங்க நகை பறிமுதல்
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் தொடா் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை, கைது செய்து அவா்களிடமிருந்து 87 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா், ராஜபாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட பெரியகுளத்தைச் சோ்ந்த 2 போ் உள்ளிட்ட கும்பலை விருதுநகா் காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனா்.
இந்த கும்பலுக்கு கோவை பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரிய வந்ததால், அவா்களை நீதிமன்றம் மூலம் கோவை போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தி பின்னா் சிறையில் அடைத்தனா்.
இந்த குற்றவாளிகளில் பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்த மூா்த்தி (32), அம்சராஜ் (30) ஆகியோருக்கு பழனிசெட்டிபட்டி பகுதியில் நடைபெற்ற தொடா் திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கோவை சிறையிலிருந்த மூா்த்தி, அம்சராஜ் ஆகியோரை தேனி நீதித் துறை நடுவா் நீதிமன்றம் மூலம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.
இதில், இருவருக்கும் பழனிசெட்டிபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற 9 திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்குகளில் மூா்த்தி, அம்சராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 87 பவுன் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்யதனா்.
பின்னா், இருவரும் தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனா்.