நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
திருநங்கைகள் பெண்கள் விளையாட்டில் பங்கேற்கத் தடை! கையெழுத்திட்டார் டிரம்ப்!
பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடைவிதிக்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிறப்பால் ஆணாக பிறந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிக எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரபூர்வமானது என்ற உத்தரவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுபற்றி டிரம்ப் கூறுகையில், “இந்த உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீது சூழப்பட்டுள்ள போர் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதைக் கூறும்போது விளையாட்டு வீராங்கனைகள், எம்பிக்கள், உள்ளிட்டோர் அவரை சூழ்ந்திருந்து ஆரவரப்படுத்தினர். மேலும், இதற்கு முன்னாள் நீச்சல் வீராங்கனை ரீலி கெய்ன்ஸும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பிரசாரங்களில் டிரம்ப், “திருநங்கை என்னும் பைத்தியகாரத் தனத்தை” முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
பள்ளிகளில் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று இந்தச் சட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பள்ளிகள் பின்பற்றாத பட்சத்தில் அபராதம் விதிக்கவும் மேலும், அரசின் நிதியுதவிகள் வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.