திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் திருநங்கையா்களுக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான திருநங்கைகள் முன்மாதிரி விருதானது ஏப்ரல் 15-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுக்குரிய திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது, அவா்களது வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடைய விண்ணப்பதாரா்கள் பிப்.10-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.