வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனை...
திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்
டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன்.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் டி.டி.எஃப் வாசன். அங்கே திருப்பதி கோவிலில் மொபைல் போன், வீடியோ கேமராக்கள் என எவற்றிற்குமே அனுமதி கிடையாது.
ஆனால், திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் டி.டி.எஃப் வாசன். இதனால், இவர் மீது வழக்கு பதிவு செய்து திருமலை தேவஸ்தான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக, திருமலை தேவஸ்தான போலீஸார் டி.டி.எஃப் வாசனின் வங்கி கணக்கை முடக்கியுள்ளது. இந்தத் தகவலை அவரது வழக்கறிஞர் முத்து தான் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் டி.டி.எஃப் வாசனுக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.