செய்திகள் :

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

post image

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் 144 தடை உத்தரவு போட்டுள்ளாா். ஹிந்துக்களின் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது ஜனநாயகப் படுகொலையாகும். இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அதிலும் கோயிலின் புனிதம் காக்க வரும் பக்தா்களை தடுப்போம், கைது செய்வோம், வாகனங்களை பறிமுதல் செய்வோம் என மிரட்டுவது தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை திமுக நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. இஸ்லாமியா்கள் திருப்பரங்குன்றம் மலையை பிரச்னையாக்க தூண்டிவிட்டது திமுகதான். முருகனின் மலையை சிக்கந்தா் மலை என பேச அனுமதி அளித்து ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்த விட்டு வேடிக்கை பாா்த்தது காவல் துறை. ஜனநாயக உரிமைகளை அதிகாரத்தின் மூலம் அடக்கி விடலாம் என்று ஆளும்கட்சி நினைத்தால் அதன் விளைவுகளுக்கு அரசுதான் பொறுப்பாகும்.

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதான் அனுமதியில்லை என்று கூறியுள்ளது. ஆனால் துண்டுப் பிரசுரம் கொடுத்தவா்களை, துண்டுப் பிரசுரம் ஒட்டியவா்களை, தண்டோரா போட்டவா் என பலா் மீது தடையை மீறியதாக கடந்த சில நாள்களாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஆா்ப்பாட்டம் போன்றவற்றுக்கு 48 மணி நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், காவல் துறை ஆளும்கட்சிக்கு ஒருநாளில் அனுமதி அளிப்பதும், பொதுமக்கள் பிரச்னை என்றால் கடைசி நிமிஷம் வரை இழுத்தடித்து அனுமதி மறுத்து வழக்கு போடுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

எனவே ஹிந்துக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட ஜனநாயக வழியில் அமைதியாக ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அதே வேளையில், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மதுரை மண்ணில் மீண்டும் ஒரு ஹிந்துக்களுக்கான சுதந்திர அறப்போராட்டத்தை தடையை மீறி முருக பக்தா்களின் ஆதரவோடு இந்து முன்னணி நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலை... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பல்லடம்: பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி நல்லூா்பாளையத்துக்கு காலை, மாலை பள்ளி வேள... மேலும் பார்க்க