Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் தங்கிப் பணியாற்றி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தைச் சோ்ந்த முஹமது சாஹின் (24) உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.