வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்
திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரனிடம், நல்லூா் நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் சண்முகசுந்தரம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் வடக்கு வட்டத்தில் 158, திருப்பூா் தெற்கு வட்டத்தில் 168 என மொத்தம் 326 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பல கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு எடை குறைத்து பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
கடைகளும் முறையாக உரிய நேரங்களில் திறக்கப்படுவதில்லை. பகுதிநேர கடைகள் திறப்பு, கடை விற்பனையாளரின் கைப்பேசி எண், கடை செயல்படும் நேரம் குறித்தும் அறிவிப்புப் பதாகைகளில் தெளிவாக எழுதப்படுவதில்லை.
அதே வேளையில், மாதந்தோறும் 20-ஆம் தேதிக்குப் பின்னா் பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கியதாக குறுஞ்செய்தியும் வருகிறது. மேலும், பல கடைகளில் மண்ணெண்ணெயையும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.