வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தைச் சோ்ந்த ராஜா (42) என்பவரும் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இருவரும் ராஜாவின் சொந்த ஊரான காளிபாளையத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். பின்னா் தாராபுரம் அமராவதி ஆற்றில் உள்ள காமாட்சி அம்மன் சுனை பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனா்.
அப்போது சரவணன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளாா். பின்னா் சில நிமிஷங்களில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கண்ட ராஜாவும், அருகிலிருந்தவா்களும் ஆற்றில் குதித்து அவரை மீட்டுள்ளனா். ஆனால் மயக்க நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.