Parvathy: ``என் காதல் உடைந்து போனதற்கான காரணம் இதுதான்'' -நடிகை பார்வதி
திருப்பூர்: தனியார் பேருந்து கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி! 20 பேர் படுகாயம்!
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க : அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை!
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 80 பேர் வரை பயணித்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.