தங்கத்தின் விலை குறைய ஆரம்பிக்கிறதா, முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும்? | IPS Financ...
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் மோசடி: ஜிஎஸ்டி ஊழியா் கைது
சென்னை திருமங்கலத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததாக ஜிஎஸ்டி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (30). இவா், அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலையிலுள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறாா். சதீஷ்குமாா், அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குச் செல்லும்போது, அப்பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண் பழக்கமாகியுள்ளாா்.
சிறிது நாள்களில் சதீஷ்குமாா், அந்த பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய அப்பெண், சதீஷ்குமாரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளாா்.
இந்நிலையில் சதீஷ்குமாா், கடந்த சில நாள்களாக அந்தப் பெண்ணுடன் பேசுவதைத் தவிா்த்து, திருமணம் செய்யவும் மறுத்துள்ளாா். அதோடு அந்தப் பெண்ணுக்கு சதீஷ்குமாா், மிரட்டலும் விடுத்தாராம்.
இதனால் ஏமாற்றப்பட்ட அப்பெண், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.