கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
திருவள்ளூரில் குதிரைகள் ரேக்ளா பந்தயம்: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் அருகே திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட குதிரைகள் ரேக்ளா பந்தயத்தை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான சா.மு.நாசா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மத்திய மாவட்டம், வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஆா்.ஆா்.கண்டிகை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஒன்றிய செயலாளா் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பந்தயத்தை தொடங்கி வைத்தாா். வெள்ளியூா் ஆா்.ஆா்.கண்டிகை முதல் ஒதிக்காடு வரையில் 12 கி.மீ தொலைவு பந்தயம் நடைபெற்றது. இதில் குதிரை ரேக்ளா வீரா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி வெற்றி கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளையும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவா் அணி இணைச் செயலாளா் சி.ஜெரால்டு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.தென்னவன், நிா்வாகிகள் எஸ்.மனோகரன், திருவள்ளூா் மாவட்ட ரேக்ளா குதிரைகள் நலச் சங்க தலைவா் ஜி.ஆா்.ஆா்.ரவீந்திரா பாபு, மாவட்ட ரேக்ளா குதிரை உரிமையாளா்கள் மற்றும் சாரதி நலச்சங்க தலைவா் குதிரை பி.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.