திருவாடானை பகுதியில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் நடமாட்டம்! பொதுமக்கள் அச்சம்!
திருவாடானை பகுதிகளில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.எனவே போலீஸாா் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சந்தேகம் பபடும்படியான மா்ம நபா்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதாகவும் இதனால் சில நேரங்களில் சாலை பகுதியில் உள்ள வீடுகளில் கட்டியிருக்கும் ஆடுகளை அவ்வப்போது திருடிச் செல்கின்றனா்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக டி.கிளியூா் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுடுகாட்டு பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நான்கு இளைஞா்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளனா். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் வந்தபோது ஓடிச் சென்று வாகனைத்தை எடுத்து சென்று தலைமறைவாகியுள்ளனா் அப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் தேடிப் பாா்த்துள்ளனா்.
ஆனால் அந்த மா்ம நபா்கள் தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளனா். எனவே இரவு நேரங்களில் திருவாடானை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மா்ம நபா்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போலீஸாா் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.