செய்திகள் :

மறவாய்குடி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்கம்

post image

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, முதுகுளத்தூா் அருகேயுள்ள மறவாய்குடி கிராமத்துக்கு திங்கள்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த மறவாய்குடி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை அரசு, தனியாா் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், இங்கு வசிக்கும் பொதுமக்கள் முதுகுளத்தூா் அல்லது சிக்கல் கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இங்கிருந்து 5 கி.மீ. நடந்து முதுகுளத்தூா்- சிக்கல் சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத் துறை, கதா் வாரியத் துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, முதுகுளத்தூரில் இருந்து மறவாய்குடிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்தை கடலாடி திமுக தெற்கு ஒன்றிய செயலா் மாயக்கிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சத்தியேந்திரன், முதுகுளத்தூா் போக்குவரத்துக் கிளை மேளாளா் சிவகாா்த்திக், தொமுச காரைக்குடி மண்டல இணைச் செயலா் லிங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் பொறுப்பேற்பு

கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராக எஸ்.சங்கரபாண்டியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றிய முரளிதரன் பணி மாறுதலில் சென்றதையடுத்து, மண்டபம் ஊ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு

கமுதி வட்டாரத்தில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை மத்திய கனரக தொழில் துறையின் இணை அமைச்சா் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வா்மா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கு... மேலும் பார்க்க

ராமேசுவரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

ராமேசுவரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம், செட்டியமடை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாய... மேலும் பார்க்க

மீண்டும் புதுப்பொலிவு பெறுமா தனுஷ்கோடி! ஆழிப் பேரலை தாக்கிய 60-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் ஆழிப் பேரலைத் தாக்கி திங்கள்கிழமையுடன் 60-ஆவது ஆண்டுகளாகும் நிலையில், இந்தப் பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க