``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
ராமேசுவரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு
ராமேசுவரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியாகவும், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் நகராட்சியுடன் பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.