பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை மத்திய கனரக தொழில் துறையின் இணை அமைச்சா் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வா்மா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பால கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய கனரக தொழில் துறையின் இணை அமைச்சா் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வா்மா பாலத்தை ஆய்வு செய்தாா்.
மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மையத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே தூக்கியும், கீழே இறக்கியும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது ரயில்வே தலைமைப் பொறியாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.