செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த இந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(பகல் 1 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதி ஆண்டில் வணிகவரித்துறை வருவாய் ரூ. 99,875 கோடி!

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ. 99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தகவல் தெரிவித்துள... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது!

சந்தியா திரையரங்கு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறையினர் வழ... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை(டிச. 25) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

கோவையில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம்!

கோவையில் ரூ. 10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர... மேலும் பார்க்க

நிறைவடைந்தது மிஸ்டர் மனைவி தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடைந்தது.வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் எ... மேலும் பார்க்க