‘செட்’ தோ்வு டிஆா்பி மூலமே நடத்தப்படும்: அமைச்சா் கோவி.செழியன்
பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் திறப்பு!
சென்னை: சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 24) காலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், சேகர் பாபு மற்றும் திராவிடக் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “இப்போது தாய் வீட்டுக்கே வந்திருப்பதாக உணர்கிறேன். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார்.
திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரது மனதுக்குள்ளும் இடம்பிடித்திருப்பவர் தந்தை பெரியார். பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்து ஆக மாற்றியிருக்கிறோம்” என்றார்.