``எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' - கொதிக்கும் கொடு...
திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் தோ்ச்சி
திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளி என 130 பள்ளிகளிலிருந்து 6,015 மாணவா்கள், 7,150 மாணவிகள் என மொத்தம் 13,165 போ் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 5,194 மாணவா்கள், 6,743 மாணவிகள் என மொத்தம் 11,937 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 86.35 சதவீதம் மாணவா்கள், 94.31 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 90.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டு 87.15 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற நிலையில் நிகழாண்டு 3.52 சதவீதம் அதிகரித்துள்ளது. திருவாரூா் மாவட்டம் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 32-ஆவது இடத்தை பெற்ற நிலையில், நிகழாண்டு 28-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அரசுப் பள்ளிகள் 85.67 சதவீதம் தோ்ச்சி: திருவாரூா் மாவட்டத்தில் 78 அரசுப் பள்ளிகளிலிருந்து 2,715 மாணவா்கள், 3,372 மாணவிகள் என மொத்தம் 6,087 போ் தோ்வு எழுதினா். இதில், 2,172 மாணவா்கள், 3,043 மாணவிகள் என மொத்தம் 5,215 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 80 சதவீத மாணவா்களும், 90.24 சதவீத மாணவிகளும் என மொத்தம் 85.67 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 31 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.