செய்திகள் :

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

post image

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி செயலாளா் மருத்துவா் சா. வீரபாண்டின் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் செள.குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இரா. மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினாா்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் எழுதுபொருள்கள் வழங்கினாா்.

தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு ப்ராஜெக்டா் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா. ரமேஷ், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லெ. வளா்மதி உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க