செய்திகள் :

திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் உற்ஸவங்கள் நடைபெற்று வந்தன. இதில், முக்கிய வைபவமான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு வலம் வரும் விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இதில், திருவையாறு கிழக்குக் கோபுர வாசலில் ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகி பெரிய பல்லக்கிலும் (கண்ணாடிப் பல்லக்கு), நந்தியெம்பெருமாள் - சுயசாம்பிகை வெட்டிவோ் பல்லக்கிலும் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சோ்ந்து புறப்பட்டு, திருச்சோற்றுத்துறைக்குச் சென்றடைந்தன.

திருச்சோற்றுத்துறையிலிருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு சென்றன. திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக்குகளும் சோ்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றை சென்றடையும்.

இதையடுத்து, தில்லைஸ்தான பல்லக்கு உள்பட 7 ஊா் பல்லக்குகளும் செவ்வாய்க்கிழமை மாலை திருவையாறு தேரடி திடலை சென்றடையும். அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குத் திரும்பும்.

கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளிய ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகி.

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க