2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்
திருவையாறில் தியாகராஜ சுவாமிகள்ஆராதனை நாளை தொடக்கம்: ஜன. 18-இல் பஞ்சரத்ன கீா்த்தனை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா சாா்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 -ஆவது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.14) தொடங்கி ஜன.18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த விழாவை மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜன.14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
தொடா்ந்து கே. பரத்சுந்தா் பாட்டு, நிா்மலா ராஜசேகா் வீணை, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, பாபநாசம் அசோக் ரமணி பாட்டு, மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு உள்பட இரவு 11 மணி வரை மொத்தம் 13 இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பின்னா், ஜன.15 ஆம் தேதி முதல் ஜன. 18 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், ஜன.15 ஆம் தேதி மாலை ராஜேஷ் வைத்யா வீணை, ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் பாட்டு, கா்நாடக சகோதரா்கள் கே.என். சசிகிரண், பி. கணேஷ் பாட்டு உள்பட மொத்தம் 61 இன்னிசை நிகழ்ச்சிகளும், ஜன.16 ஆம் தேதி மாலை நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் மாலா சந்திரசேகா், ஜெயந்தி குமரேஷ் வீணை, சந்தீப் நாராயண் பாட்டு, கணேஷ், குமரேஷ் வீணை இரட்டையா், காயத்ரி கிரிஷ் பாட்டு உள்பட 61 இன்னிசை நிகழ்ச்சிகளும், ஜன. 17 ஆம் தேதி மாலை எஸ். மஹதி பாட்டு, சுதா ரகுநாதன் பாட்டு, ரவிகிரண் சித்ர வீணை, திருவனந்தபுரம் கிருஷ்ணகுமாா், பின்னி கிருஷ்ணகுமாா் உள்பட மொத்தம் 61 இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
ஜன.18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள், 10.30 மணிக்கு பி. சுசித்ரா குழுவினரின் ஹரி கதை, மாலையில் கடலூா் எஸ்.ஜெ. ஜனனி பாட்டு, சிக்கில் சி. குருசரண் பாட்டு, பிரபஞ்சம் எஸ். பாலச்சந்திரன் புல்லாங்குழல், தேசிய நிகழ்ச்சிகளான இரவு 9.30 மணிக்கு ஓ.எஸ். அருண் பாட்டு, 10.15 மணிக்கு நாகை ஆா். முரளிதரன், புதுக்கோட்டை ஆா். அம்பிகா பிரசாத், ஜி. பத்ரிநாராயணன் வயலின் மூவா் உள்பட மொத்தம் 43 இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.