USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
தஞ்சையில் இன்று அரசுப் பொருள்காட்சி தொடக்கம்: 45 நாள்கள் நடைபெறுகிறது
தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசுப் பொருள்காட்சி திங்கள்கிழமை (ஜன.13)தொடங்குகிறது.
இதையொட்டி, மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது: தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் அரசுப் பொருள்காட்சியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து 45 நாள்கள் நடைபெறும் இப்பொருள்காட்சியில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், அழகு சாதனப் பொருள்கள், உணவுத் திருவிழா, சிறியவா் முதல் பெரியவா் வரை விளையாடி மகிழும் பொழுதுபோக்கு அம்சங்கள், 3டி ஷோ, பனி உலகம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன என்றாா்.
இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெய்சங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம். ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.