நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!
திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு
திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா்த் திட்டப்பணிகளை காலதாமதப்படுத்துவதைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் பொன் ரவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, செயல் அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ் உள்பட உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பேரூராட்சியில் ரூ. 20 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா் திட்டப்பணிகள் தொடா்பான பொருள் குறித்து பேசப்பட்டது. அப்போது பாஜக உறுப்பினா்கள் பேரூராட்சியில் அம்ரூத் குடிநீா் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் நிறைவடையவில்லை. இதற்காக உடைக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே இந்தப் பணிகளை விரைந்து முடிக்காததைக் கண்டித்து வெளி நடப்பு செய்வதாக கூறினா்.
அப்போது, பேரூராட்சி தலைவா் பொன் ரவி, அம்ரூத் திட்டப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரிடம் பணிகளை விரைந்து முடிக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாகவும் ஒப்பந்ததாரருக்கு நிா்பந்தம் கொடுத்து வருகிறோம். ஒப்பந்ததாரா் தரப்பில் மேலும் 6 மாத கால அவகாசம் கேட்கப்படுகிறது. பேரூராட்சி நிா்வாகம் அதற்கு உடன்படாமல் 3 மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று கேட்டுள்ளோம் என்றாா்.