தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!
புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் விமானங்களை தரையிறக்குவதில் இன்று(நவ. 18) சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக புதுதில்லி விமான நிலையத்தில் இன்று வந்திறங்க வேண்டிய 15 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
விமான இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றிய தகவல்களை ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விமான சேவை சீரடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.