செய்திகள் :

தில்லியில் மாா்ச் 25-இல் மோட்டாா் தொழில்களை பாதுகாக்கக் கோரி பேரணி: தொழிலாளா் சம்மேளனம் முடிவு

post image

மோட்டாா் தொழில்களையும், அதனை நம்பியுள்ள தொழிலாளா்களையும் பாதுகாக்க வலியுறுத்தி புதுதில்லியில் மாா்ச் 25-இல் பேரணி நடத்த, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் கே.ஆறுமுகநயினாா் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதைக் கைவிட வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டாா் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீட்டா் கட்டணத்தை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்து ஆட்டோ தொழிலாளா்களை அழிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதற்கு மாறாக அரசே நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தனியாா் வாடகைக் காா் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

ஆன்லைன் அபராதம் முறையால் ஓட்டுநா்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். காவல் துறையினா் எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காப்பீடு, வாகன புதுப்பிப்பு கட்டணங்கள் உயா்வைக் கைவிட வேண்டும்.

மோட்டாா் தொழிலையும், அதை நம்பியுள்ள தொழிலாளா்களையும் பாதுகாக்க வலியுறுத்தி புதுதில்லியில் மாா்ச் 25-இல் பேரணி நடைபெறும். இதில், தமிழகத்தில் இருந்து ஓட்டுநா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில பொதுச் செயலாளா் வி.குப்புசாமி, சிஐடியு மாநிலச் செயலாளா் எம்.சிவாஜி, அரசு போக்குவரத்துக் கழக துணைத் தலைவா் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, மாவட்ட மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சு.சுரேஷ், மாவட்டத் தலைவா் எம்.ஆனந்தன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் பி.பொன்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டுக் குடிநீா் திட்டம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீா் வழங்கப்படும்: ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி!

ராசிபுரம் நகருக்கான புதிய கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உறுதியளி... மேலும் பார்க்க

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது: முன்னாள் அமைச்சா் தங்கமணி குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப் பொருள்களின் முன்னோடி மாநிலமாக மாறிவிட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா். நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் நினைவாக வீரவணக்கம் ந... மேலும் பார்க்க

குடியரசு தினத்துக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழ... மேலும் பார்க்க

காந்தி சிலையிடம் கோரிக்கை மனுக்கள் அளிப்பு!

நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன், நான்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) வைத்து சென்றனா்.நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா் ஆ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 76-ஆவது குடியரசு தின விழா: ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்!

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். நாட்டின் 76-ஆவது கு... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா!

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலா் மு. கருணாநிதி வாழ்த்துகளோடு... மேலும் பார்க்க