செய்திகள் :

தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம்

post image

தலைநகர் தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிகார் மாநிலம், சிவான் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிமீ தொலைவில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதேபோல் வடகிழக்கு மாநிலமான சிக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 2.3ஆகப் பதிவாகியுள்ளது. முன்னதாக தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்த நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க